ஹேஷ் ரக போதைப்பொருளை கடத்திய திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
ஹேஷ் ரக போதைப்பொருளை சிற்றூர்ந்து ஒன்றில் கடத்திச் சென்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தலவதுகொட – கிம்புலாவல சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையின் விசேட அதிரடிப்படையினால் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர், குட்ட தயா எனப்படும் சேனாதீரகே தொன் தயாநந்த இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 35 கிராம் ஹெஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்க காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது