இளைஞரின் உயிரைப் பறித்த கோர விபத்து (படங்கள்)

இளைஞரின் உயிரைப் பறித்த கோர விபத்து (படங்கள்)

 

புத்தல - பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (07) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காரொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வெல்லவாய - கொடவேஹேர பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தினால் காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் 18 மற்றும் 23 வயதானவர்கள் என காவல்துறையினர் தெரிலித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணை புத்தல காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.