சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 1,937 பேருக்கு நேர்ந்த கதி
சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய மின்சார சபை விசாரணை பிரிவு பொலிஸாரின் உதவியுடன் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகயை ஆரம்பித்தது.
இதற்கமைய கடந்த மே மாதம்முதல் இவ்வருட மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் அபராதமாக 59 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
பல்வேறு நபர்கள் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதன் காரணமாக மின்சார சபை ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியனுக்கும் கூடுதலான நட்டத்தை எதிர்நோக்குகின்றது.