கூட்டு ஒப்பந்தம் - சம்பள நிர்ணய சபை மூலம் வேதன பிரச்சினை தீர்க்கப்படாது - பழனி திகாம்பரம்

கூட்டு ஒப்பந்தம் - சம்பள நிர்ணய சபை மூலம் வேதன பிரச்சினை தீர்க்கப்படாது - பழனி திகாம்பரம்

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா வேதனப்பிரச்சினை தீர்க்கப்படாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர்களுடன் ஹட்டனில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு தோட்டங்கள் பகிர்ந்தளிப்பதன் ஊடாகவே அவர்களது வேதன பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்