வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலி
வெள்ளவத்தை கரையோர வீதியில் மதுபோதையில் சாரதியொருவர் ஏற்படுத்திய வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த 4 பேர் காயமடைந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மதுபோதையில் மகிழுந்தினை செலுத்திய 49 வயதான சாரதி கைது செய்யப்பட்டார்