கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட மதுபானசாலை!

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட மதுபானசாலை!

தலவாக்கலை நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் மூடியுள்ளனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு பிரவேசித்த ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கொவிட்-19 நோயாளர் தலவாக்கலை நகரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கும் சென்றுள்ள நிலையில் அந்த நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணியவர்களின் விபரங்கள் திரடப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்