கௌரவத்திற்காக மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

கௌரவத்திற்காக மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தந்தை தனது மகளை ஆணவக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணம் செய்து வைத்த மகள் காதலனுடன் சென்ற விரக்தியில் பெற்ற மகளையே தந்தை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் தனது 19 வயதான மகளை கொலை செய்துவிட்டதாக கோத்வாலி காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

அவரை கைது செய்த பின் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் விருப்பமில்லாமலேயே அவரின் பெற்றோரின் வற்புறுத்தலில் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து காதலனுடன் சென்ற மகளை உறவினர்களுடன் சேர்ந்து கடத்தி அவரை கொடூரமான முறையில் கொன்றுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்