வவுனியாவைச் சேர்ந்தவர் நாயாற்றுக் கடலில் சடலமாக மீட்பு

வவுனியாவைச் சேர்ந்தவர் நாயாற்றுக் கடலில் சடலமாக மீட்பு

வவுனியாவினைச் சேர்ந்த ஒருவர் நாயாற்றுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நாயாற்றுக் கடல் நீர் ஏரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நால்வர் குளிக்கச் சென்ற நிலையில், ஒருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போனவரை தேடும் பணிகள் சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது, கடலில் இருந்து காணாமல் போனவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாற்றுக் கடலில்

உயிரிழந்தவர் வவுனியாவினைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் சடலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்