குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் விற்கப்பட்டதா?

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் விற்கப்பட்டதா?

சிகிரியா-காயன்வல பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட 02 ஏக்கர் பரப்பு கொண்ட நிலம் ஒன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண ஆளுனர் கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்தே குறித்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது