கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 350 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்று 94 பேருக்கு தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 82 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 31 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் 131 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது