கொழும்பு - டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர் விசாரணை; விசேட காவல் துறை குழுவும் ஒத்துழைப்பு

கொழும்பு - டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர் விசாரணை; விசேட காவல் துறை குழுவும் ஒத்துழைப்பு

கொழும்பு - டேம் வீதியில் பயணப் பொதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி இன்றைய தினமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மற்றுமொரு விசேட காவல்துறை குழுவும் ஈடுபடவுள்ளது.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி, நேற்றைய தினமும் களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது