
வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்
வெள்ளவத்தை - கரையோர வீதியில் இன்று காலை மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார்.
அத்துடன், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி, வெள்ளவத்தை காவல்துறையினரால் மகிழுந்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த மகிழுந்தில் பயணித்த மதுபோதையில் இருந்த மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்