மட்டக்களப்பு மாநகர சபை கணக்காளருக்கு கொவிட்
மட்டக்களப்பு நகர சபையின் பிரதம கணக்காளருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதையடுத்து அங்கு பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராசா சரவணன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள கணக்காளருடன் தொடர்பினைக் கொண்டிருந்தவர்களைத் தேடி பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்