கொழும்பு நகரின் பிராண வாயுவின் அளவை நாளாந்தம் அளவிடுவிதற்கான வேலைத்திட்டம்
கொழும்பு நகரின் பிராண வாயுவின் அளவை நாளாந்தம் அளவிடுவிதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க சுற்றாடல் அமைச்சும், கொழும்பு நகர சபையும் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.
கொழும்பு நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காற்று மாசினை குறைத்து பிரணவாயுவினை அதிகரிப்பதற்காக கொழும்பு நகரிற்கு ஏற்ற மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் இடவசதிகள் உள்ள அனைத்து இடங்களிலும் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது