கொட்டகலையில் 16 பேருக்கு கொரோனா: 7 மாணவர்களும் உள்ளடக்கம்

கொட்டகலையில் 16 பேருக்கு கொரோனா: 7 மாணவர்களும் உள்ளடக்கம்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொட்டகலை பகுதியின் 4 பாடசாலைகளை சேர்ந்த 12 பேர் அவர்களில் அடங்குவதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சவுந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.

7 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் மற்றும் ஏனைய நால்வருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தொற்றுறுதியான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் எவரும் நடைபெற்று வரும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புப்படவில்லை என கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சவுந்தர் ராகவன் தெரிவித்தார்