24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்

24 வயதில் ஐஸ்வர்யா ராயுடன் பிக்பாஸ் ஆரி... தெறிக்கவிடும் புகைப்படத்தினை வைரலாக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் ஆரி தனது 24 வயதில் ரெட்டைச்சுழி ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதறிவிட்டவர் தான் ஆரி.

சமூகஅக்கறைக் கொண்ட இவரை உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஒதுக்கியே வைத்திருந்தனர். ஆனால் இதை எதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஆரி தனியாகவே விளையாடி வந்தார்.

இதனால் வெளியில் இருந்த ரசிகர்களுக்கு ஆரியை அதிகமாக பிடித்துவிட்டது மட்டுமின்றி அவரை வெற்றிக்கோப்பையை பெறவும் வைத்தனர்.

இந்நிலையில் ஆரி தனது 24 வயதில் ரெட்டைச்சுழி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ஐஸ்வர்யா ராயுடன் கலந்து கொண்ட புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.