முகக்கவசம் அணியாதவர்களுக்கு நேர்ந்த கதி! தீவிர கண்காணிப்பில் பொலிஸார்
சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் முகக்கவசங்களை அணியாத குற்றத்துக்காக 1441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு சுயதனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் முகக்கவசங்களை அணியாதோரை கண்காணிப்பதற்காக பொலிஸார் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை,முகக்கவசம் அணியாத பயணிகள் பயணிப்பதற்கு இடமளிக்கும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முகக் கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.