2020 பொதுத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பம்

2020 பொதுத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பம்

2020 பொதுத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கான முன்னெடுப்புக்கள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்று முதல் வாக்குச்சீட்டுகளை வெளியிடுவதும், அஞ்சல் ஒப்படைப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு மொத்தம் 53037 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவற்றில் 5085 பேர் தகுதிப் பெற்றுள்ளதுடன், 47430 அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரப் பிரிவுகளைத் தவிர்த்து அடுத்த மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரப் பிரிவுகளுக்கான வாக்களிப்பு ஜுலை மாதம் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்த தினங்களில்; வாக்களிக்க இயலாத அஞ்சல் மூல வாக்களார்கள் ஜூலை 20 ஆம், 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.