உயர் தரப்பரீட்சைகள் மேலும் ஒத்திவைக்கப்படலாம் - கல்வியமைச்சர்
இம்முறை உயர் தரப் பரீட்சை நடைபெறும் தினம் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கற்றல் நடவடிக்கைகளுக்கு ஒரு மணி நேரம் போதுமானதல்ல என்பதால், பரீட்சை நடைபெறும் தினம் குறித்து மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆய்வுகளை நடத்துவதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மாணவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவார்கள் எனவும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பட்டுள்ளார்.