கரும்புள்ளிகள் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தூக்கி எறிகிறவர்களா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க

கரும்புள்ளிகள் அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தூக்கி எறிகிறவர்களா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க

பொதுவாக பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை என்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லாதவை என்பது நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக வாழைப்பழத்தில் மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக அளவில் வைட்டமின் சியும் மற்ற சத்துக்களும் இருக்கின்றன என்று தெரிந்தும் கூட நாம் அதை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

அதற்கு முக்கியமான காரணம் வாழைப்பழம் நமக்கு எளிதாகக் கிடைக்கிறது. எல்லா சீசன்களிலும் கிடைக்கிறது.

குறிப்பாக விலையும் மற்ற எல்லா பழங்களைக் காட்டிலும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பது தான். அதனால் தான் நாம் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

கருப்பு புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தின் பயன்கள்

 

கருப்பு புள்ளிகள் அதிகம் கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது.

இதில், விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.

அது செரிமானத்தை சீராக்கி, எளிதில் உணவுகளை ஜீரணம் செய்ய உதவுகிறது.

புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். இதனால், வயிறு சீக்கிரம் நிரம்பியது போன்ற உணர்வை அளிக்கிறது. இதனால், கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழத்தை இனி குப்பை தொட்டியில் போடாதீர்கள்.