காதலன் மற்றும் காதலியை காப்பாற்ற நீர்வீழ்ச்சியில் குதித்த காதலியின் தாயார்..!

காதலன் மற்றும் காதலியை காப்பாற்ற நீர்வீழ்ச்சியில் குதித்த காதலியின் தாயார்..!

எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் , புகைப்படக் கலைஞருடன் திருமணத்திற்கு முன்பதான புகைப்படங்கள் சில எடுப்பதற்காக சேர எல்ல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சென்ற காதலன் மற்றும் காதலி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்ததில் காதலன் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் மாலை 4.00 மணியளவில் தனது காதலியுடன் புகைப்படம் ஒன்றை எடுப்பதற்காக குறித்த நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு இருவரும் சென்றுள்ளனர். 

 

இதன்போது திடீரென இருவரும் எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இருவரையும் காப்பாற்ற காதலியின் தாய்,  நீரில் குதித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து காதலி காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், காதலன் நீரில் மூழ்கி காணாமல் போனதை தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விருவருக்கும் எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் புகைப்படக் கலைஞருடன் திருமணத்திற்கு முன்பதான புகைப்படங்கள் சில எடுப்பதற்காக சேர எல்ல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் குருநாகல்-பன்சிலுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.