நபர் ஒருவருக்கு 17 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை
யக்கல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரது தங்க மாலையினை கொள்யைடித்து சென்ற நபர் ஒருவருக்கு 17 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை வழங்கக்பபட்டுள்ளது.
இது குறித்து முன்னெடுத்து செல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்டது.
இரு குற்றசாட்டுகளுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபராதம் மற்றும் இழப்பீடு வழங்கப்படாவிடின் மேலும் 23 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாத காலப்பகுதியில் 47 வயதுடைய பெண் ஒருவரின் தங்கமாலை கொள்ளையடித்து துஷ்பிரயோகம் செய்யத்துள்ளமை நீதிமன்றில் நீரூபிப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே இவ்வாறு தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.