வாகனங்களை கையளிக்கத் தவறிய முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் திருப்பி அனுப்பப்படாத 05 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை உடனடியாக கைப்பற்ற இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த வாகனங்கள் மார்ச் 02 ஆம் திகதியே கையளிக்க வேண்டியிருந்தபோதும், இன்னும் சில முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அதனை கையளிக்க தவறிவிட்டனர் எனக் கூறினார். தற்போது இராஜாங்க அமைச்சர்கள் இல்லாததால், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களை மீண்டும் கையளிக்க வேண்டும் வேண்டும் என குறிப்பிட்டார். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அவை சட்டத்தை மீறியமை நிரூபிக்கப்பட்டால், தேர்தலைத் தொடர்ந்து அந்த அரசியல்வாதிகள் தங்கள் ஆசனங்களை இழக்க வாய்ப்பு உள்ளது என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.