ஒரே வாரத்தில் 3 நோயாளர்கள்! ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒரே வாரத்தில் 3 நோயாளர்கள்! ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் கடந்த வாரம் மூன்று மலேரியா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த வருடத்தில் இதுவரை 13 பேர் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அடையாளங் காணப்பட்டுள்ள மலேரியா நோயளர்கள் மூன்று பேரில் ஒருவர் தம்புள்ளை - பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியை சேர்ந்த குறித்த நபர், மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு மலேரியா நோயாளர்களும் தம்பதிவ யாத்திரை சென்று நாடு திரும்பியவர்கள் என்பதுடன் அவர்கள் இவ்வாறு யாத்திரை சென்று 10 மாதங்களுக்கு பின்னர் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் இரத்தினபுரி மற்றும் கலவானை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகள் மற்றும் குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தரும் நபர்களே மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர், மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்கள் இது தொடர்பில் மிகவம் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.