தெற்காசிய வரலாற்றில் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்படவுள்ள வாய்ப்பு! கோட்டாபய கொடுத்துள்ள அனுமதி

தெற்காசிய வரலாற்றில் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்படவுள்ள வாய்ப்பு! கோட்டாபய கொடுத்துள்ள அனுமதி

தற்போதைய சூழலில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல் வெளியிட்டுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

தற்போதைய சூழலில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். தெற்காசியாவிலேயே முதற்தடவையாக இவ்வாறான கல்விசார் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படுவது இதுவே முதற் தடைவையாகும்.

இவ்வாறான தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதியும், பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளனர். அதனை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தேசிய பாடசாலையை அமைக்க எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.