சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவானார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைரை தெரிவு செய்வதற்கான தேர்தல், நாடளாவிய ரீதியில் 85 வாக்களிப்பு நிலையங்களில் இன்று இடம்பெற்றது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தவிசாளர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேர டி சொய்சா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளுக்கமைய இந்த தேர்தல் இடம்பெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் 5,162 வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவானார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா, 2,807 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்