
உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் யமுனா விரைவுசாலையில் பயணித்த கார் ஒன்றும், எண்ணெய் லாரி ஒன்றும் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025