கேக் வெட்டி கொண்டாடிய முத்தையா முரளிதரன்

கேக் வெட்டி கொண்டாடிய முத்தையா முரளிதரன்

21 ஆம் நூற்றாண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானும் உலகளாவிய ரீதியில் அதிக டெஸ்ட் விக்கட்களை கைப்பற்றியவருமான முத்தையா முரளிதரன் விஸ்டன் மாதாந்த சஞ்சிகையால் பெயரிடப்பட்டார்.

"2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை விளையாடிய போட்டிகளின் தரவுகளில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன்  133 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 800 விக்கட்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாறு சிறந்த வீரரராக முத்தையா முரளிதரன்  தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  கேக் வெட்டி கொண்டாடியமை சுட்டிக்காட்டத்தக்கது குறித்த கொண்டாட்ட நிகழ்வில் முத்தையா முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.