அனிருத்துடன் காதல் சர்ச்சை... தனது பாணியில் புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி

அனிருத்துடன் காதல் சர்ச்சை... தனது பாணியில் புகைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி

கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

ஆனால் இது பொய்யான தகவல் என்று கீர்த்தி சுரேஷின் தந்தை கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருந்தாலும் சினிமாக்காரர்கள் வெளியில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை போல இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தையே கிளறி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அவரது அம்மா நடிகை மேனகா, கீர்த்தி சுரேஷுக்கு மருதாணி வைத்து விடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இது தான் உண்மையான காதல் என தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கிளம்பிய சர்ச்சைக்கு சத்தமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறுகின்றனர்.