பாகிஸ்தான் பிரதமருக்கு வான்வெளி அனுமதி வழங்கிய இந்தியா

பாகிஸ்தான் பிரதமருக்கு வான்வெளி அனுமதி வழங்கிய இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம், தமது நாட்டு வான்பரப்பின் ஊடாக இலங்கைக்கு பயணிக்க, இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை வருகின்றார்.

இந்த நிலையில், தமது நாட்டு வான்பரப்பின் ஊடாக, அவர் இலங்கைக்கு பயணிப்பதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், தமது நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்ததை இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.