இன்றைய ராசி பலன்கள் 23/02/2021

இன்றைய ராசி பலன்கள் 23/02/2021

மேஷம்

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் அமைதி கூடும்

ரிஷபம்

நேச மனப்பான்மை கொண்டவர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்

மிதுனம்

ஊர்மாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் ஆதாயம் கிடைக்கும்

கடகம்

தைரியத்தோடு செயல்பட்டுச்சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர் பகை மாறும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு.

சிம்மம்

அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் கைகூடும். தொல்லைதந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். திருமண முயற்சி வெற்றி தரும்.

கன்னி

செல்வநிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பு ஏற்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். ஆடம்பரப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

துலாம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பிரபலமானவர்களின் யோசனை கைகொடுக்கும்.

விருச்சகம்

யோகங்கள் ஏற்பட யோசித்துச்செயல்பட வேண்டிய நாள். சிரித்துப்பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

தனுசு

நினைத்தது நிறைவேறும்நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோவில் திருப்பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பிரியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்

மகரம்

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்

கும்பம்

வசதிகள் பெருகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

மீனம்

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் அலைபேசி மூலம் வந்துசேரும். தந்தை வழி அனுகூலம் உண்டு. சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும்.