சமிந்த வாஸ் திடீர் இராஜினாமா

சமிந்த வாஸ் திடீர் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர் இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நோக்கிப் பயணமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக இந்த இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை இருபது 20 கிரிக்கெட் குழாம் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் இன்றி இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது