மொரகாஹென பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி (காணொளி)

மொரகாஹென பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி (காணொளி)



மொரகாஹென பெருகெடிய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் பாரவூர்தியின் முன்னாசனத்தில் பயணித்த நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரவூர்தியானது பேருந்தை முந்திச் செல்ல முற்படிட்ட போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரகாஹென காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.