8 வயது சிறுவனை 16 வயது சிறுவன் படுத்திய கொடுமை... வலியால் அலறிய கொடுமை! நாட்டாமை வழங்கிய விசித்திர தீர்ப்பு

8 வயது சிறுவனை 16 வயது சிறுவன் படுத்திய கொடுமை... வலியால் அலறிய கொடுமை! நாட்டாமை வழங்கிய விசித்திர தீர்ப்பு

நாடு முழுவதும் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.

இருந்தபோதிலும், பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வயது சிறுவன் அவனது பக்கத்து வீட்டில் உள்ள 8 வயது உறவுக்கார சிறுவனை, அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி தவறாக நடந்துள்ளான்.

அப்போது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கிராம மக்கள் சிறுவனை மீட்டுள்ளனர்.

பின்னர், வலியில் துடித்து அழுதுகொண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

உறவுக்காரர்கள் என்பதால், சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிராம மக்கள் கடந்த செவ்வாய்கிழமை இந்த வழக்கை பஞ்சாயத்தில் வைத்து தீர்க்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து குழுவினர் வேடிக்கையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

குற்றம் செய்த சிறுவனுக்கு கன்னத்தில் 4 அறையும், ரூ. 1 லட்சம் அபராதமும் கட்டுமாறு பஞ்சாயத்து நாட்டாமைகள் தீர்ப்பளித்துள்ளனர்.