
நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பொழியும் சாத்தியம்
நாட்டில் இன்றைய தினம் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மேல்,சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.