
மின் கம்பத்தில் மோதி விமானம் விபத்து!
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் எயார் இந்தியா பயணிகள் விமானம் தரையிறங்கும்போது மின் கம்பத்தில் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.
கத்தாரின் தோஹா விமான நிலையத்திலிருந்துது 64 பயணிகளுடன்விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தஇந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியது.
தரையிறங்குவதற்கான சமிக்ஞை கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கியது.
அதன்போது சற்றும் எதிர்பார்க்காத வகையில், விமானம்அதன் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தினால் விமானத்தின் ஒரு இறக்கை சேதமடைந்ததுடன் மின்கம்பமும் சாய்ந்தது.
எனினும், விமானி தனது பெரும் முயற்சியினால் விமானத்தை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார்.
இதனால் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினர் எவருக்கும் பாரிய பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன