
ரஜினி – கமல் திடீர் சந்திப்பு!
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் இன்று (20) நடிகர் ரஜினியை திடீரென சந்தித்து பேசியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருவரது சந்திப்பில் அரசியல்குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மைய கட்சி தலைவர்கமல்ஹாசன்தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பிரசாரத்தை துவக்கி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இன்று பகல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.
அங்கு 40 நிமிடம் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து கமல் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,கமல்- ரஜினியின் 40 ஆண்டு கால நண்பர்களாவர்.
ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றிருக்கலாம். இதிலும் முக்கிய அரசியல் பேச்சுவார்த்தை இருந்தால் விரைவில் நடக்கவும் கட்சி நிகழ்ச்சியில் கமல் அறிவிப்பார் என்றார்.
ரஜினி அரசியல் கட்சி துவங்க போவதில்லை என அறிவித்த பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன் பேட்டி அளித்த கமல் தனது அரசியல் பயணத்துக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது