ஒரு மணி நேரத்தில் 172 உணவுகள்... சமையலில் ஆசிய சாதனை படைத்த 9 வயது சிறுவன்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஹஷ்னாஸ் அப்துல்லா-ரஷா அப்துல்லா தம்பதியரின் மகன் ஹயன் அப்துல்லா (வயது 9). நான்கு வயதில் இருந்தே சமையல் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. சமீபத்தில் ஹயன் அப்துல்லா வேகமாக சமையல் செய்வதைப் பார்த்து அவரது பெற்றோர் அவனுக்கு ஊக்கம் கொடுத்துள்ளனர். அத்துடன் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று ஹயனும் நினைத்துள்ளார்.

 

அதன்படி, சமீபத்தில் நடந்த போட்டியில், 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ஹயன் அப்துல்லா.  தனக்கு கொடுக்கப்பட்ட 60 நிமிடத்தில் பிரியாணி, ஜூஸ் வகைகள், கேக்குகள், தோசை, சாலட், சாக்லெட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

 

 

ஹயன் அப்துல்லாவின் பெற்றோர் சென்னையில் உணவகங்கள் நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஹயன், அவர் சமைப்பதில் ஆர்வமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஒரு பைலட் ஆக விரும்புகிறார்.