வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...
வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...
பிளாகிங்
பிளாகிங் என்பது இணையத்தில் கட்டுரைகள் எழுதுவது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்காக பிளாக் எழுதும் வாய்ப்பை தருகின்றன. சிறந்த முறையில் எழுதுவதால் அதிகம் சம்பாதிக்க முடியும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புல இருந்தால் இதில் அசத்தி விடலாம். பயணங்கள் சமையல், கலைப்பொருட்கள் செய்தல் என்று எதைப்பற்ற வேண்டுமானதும் எழுத முடியும்.
பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த இடங்களை அறிமுகப்படுத்துதல்
ஒரு சில நிறுவனங்களில் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் அந்த தயாரிப்புகளை இணையம் மூலம் வாங்குவதற்கான லிங்கை, நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பிய லிங்க் மூலம் அவர்கள் அந்த நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விட்டால் உங்களுக்கு ஒரு தொகை கிடைக்கும். இந்த முறையில் அதிகர் பேர் சம்பாதிக்கின்றனர். ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் பிரபல நிறுவனங்களின் இணையதளங்களில் இது நடைமுறையில் உள்ளது.
சமையல் கற்பித்தல்
சமையல் செய்வதில் நீங்கள் கைதேர்ந்தவரா? அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கெல்லாம் டிப்ஸ் கொடுத்து அசத்திக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் சமையல் வகுப்புகள் எடுக்கலாமே. சமையல் தெரியாத பெண்கள் இப்போது நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் மூலம் பயன் பெறலாம். நீங்கள் உங்கள் திறமை மூலம் சாம்பாதிக்கலாம். உங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டிவிடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஸ்டால் போடுதல்
ஸ்டால் போடுவதில் நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் ஒருவர் மட்டுமில்லாமல் உங்களைப்போல ஆர்வம் உள்ள தோழிகள் சில பேரை இதில் சேர்த்து கொள்ளலாம், பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷச நாட்களில் உங்கள் சுற்றுவட்டார பகுதியிலேயே துணிகள், அலங்கார பொருட்கள்,உணவு பலகாரங்கள், வீட்டு சாமான்கள் போன்றவற்றை விற்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் அடைய முடியும். இது தவிர உங்கள் வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல நிலையில் உள்ள பொருட்களை கூட இந்த முறையில் விற்க முடியும். உங்கள் வீடும் சுத்தமாகும். பணமும் கிடைக்கும்.
இவ்வாறு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க நிறையை வழிகள் உள்ளன. கொஞ்சம் யோசித்தால் உங்களுக்கே இன்னும் ஏராளமான யோசனைகள் கிடைக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியாதது இருக்கிறதா என்ன?