வசந்த கரண்ணாகொட இன்று முன்னிலையாகவில்லை...!

வசந்த கரண்ணாகொட இன்று முன்னிலையாகவில்லை...!

அரசியல் பழிவாங்கள்களுக்கு உள்வாங்கப்படத்ல தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரண்ணாகொட சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்புடும் வழக்கு விசாணை நடவடிக்கைகள் காரணமாக தன்னால் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாக முடியவில்லை என அவர் கடிதம் ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளார்.

ஆகையினால் எதிர்வரும் தினங்களில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக தினம் ஒன்றினை பெற்றுத்தருமாறும் அந்த கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜெனீவாவில் மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக சில உயர் அதிகாரிகளை யுத்தக்குற்றச்சாட்டுக்களில் ஈடுப்பட்டதாக தெரிவித்து கைது செய்ய முயற்சித்ததாகவும் அவர் இதற்கு முன்னர் முன்னிலையான சந்தர்பப்த்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட பலருக்கு எதிராக மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு தாக்கல் செய்துள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தடுத்து நிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்காக அந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கும் வரை உரித்தாகும் வகையில் அந்த இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.