கொடூரமாக இடம்பெற்ற கொலை -சடலத்தை எலும்புக்கூடாக மீட்ட பொலிஸார்

கொடூரமாக இடம்பெற்ற கொலை -சடலத்தை எலும்புக்கூடாக மீட்ட பொலிஸார்

மோட்டார் சைக்கிளொன்றில் கட்டி கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலத்தை எலும்புக்கூடாக பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

ஹொரான மவாக் ஓயா பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

மவாக் ஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் இந்த எலும்புக் கூடை கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட உடல், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், கயிற்றைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் பிணைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. ஏனைய உடல் பாகங்கள் சிதைந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கொலை நடந்திருக்கும் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடு இருக்கவில்லை. மேலும் இந்த கொலை குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பல குழுக்களை களத்தில் இறக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.