புறப்படத்தயாராகவிருந்த விமானத்திற்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்- பதறிய பயணிகள்

புறப்படத்தயாராகவிருந்த விமானத்திற்கு திடீரென ஏற்பட்ட விபரீதம்- பதறிய பயணிகள்

அமெரிக்காவில் விமானம் சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவத்தால் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிற்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் 77 பேருடன் அட்லாண்டா புறப்பட தயாராகி ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது ஓடுபாதையிலிருந்து விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடும் பனிபொழிவு காரணமாக விமானம் சறுக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தின் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து விமானத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் விமான நிலைய முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், இந்த விபத்தால் விமானநிலைய நடவடிக்கைகளில் எந்த தடையும் ஏற்படவில்லை என பிற்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.