
தென் பசுபிக் பிராந்தியத்தில் நில அதிர்வு...!
தென் பசுபிக் பிராந்தியத்தில் 7.7 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
நியூ கலிடோனியாவில் (New Caledonia) வாவோவிலிருந்து கிழக்கே சுமார் 415 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தோனேஷியா - சுமத்திரா தீவு கடல் பகுதியில் நேற்றைய தினம் நிலஅதிர்வு ஒன்று பதிவானது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
றிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
பெங்குலு (Bengkulu) நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 217 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற் பரப்பில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.