உங்களுக்கு தொரியுமா ? லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

உங்களுக்கு தொரியுமா ? லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

லேப்டாப்புகள் வந்தாலும் வந்தன, அவை வழக்கமான கம்ப்யூட்டர்களுக்கு டாட்டா காட்டிவிட்டன. விலை குறைவு, எடை குறைவு, எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம், பேட்டரியில் வேலை செய்யும். அப்புறம் ஏன் அதை உபயோகிப்பதை விரும்ப மாட்டார்கள்? வசதியாயிருக்கு எல்லாம் சரி, ஆனால் அதில் உள்ள ஆரோக்கியக் குறைபாடுகளை இல்லை என்று சொல்வதற்கில்லை. உண்மையில் அன்றாட வாழ்கை முறையில் பல கடுமையான பாதிப்புகளுக்கு இது இட்டுச் செல்கிறது. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிவோர் முதுகு அல்லது பின்புற வலியில் அன்றாடம் அவதியுறுவது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

வலி, தசைப்பிடிப்பு, கண் அயர்ச்சி மற்றும் புற்றுநோய் ஆகியவை லேப்டாப்பினால் ஏற்படும் விளைவுகளில் சில. லேப் என ஆங்கிலத்தில் தொடையைக் குறிப்பிடுவது. மேலும் இது தொடையில் வைத்து வேலை செய்வதையே குறிக்கிறது. இவ்வாறு வேலை செய்கையில் உண்டாகும் சூடு உங்கள் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், இந்த சூடானது மெல்ல மெல்ல உங்கள் விந்தணுவை கொன்று உங்களை மலடாக்கி விடும் வாய்ப்புண்டு.

லேப்டாப் உபயோகிப்பதால் ஏற்படும் பின்புற வலியிலிருந்து மீள்வது கடினமான ஒன்று. லேப்டாப் உபயோகிப்பவர்களில் பெரும்பாலும் அனைவரும் அன்றாடம் இந்த பின்புற வலியைக் குறிப்பாக தெரிவிக்கின்றனர். நாம் லேப்டாப் உபயோக்கிப்பதை நிறுத்த இயலாது. ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து உபயோகித்தால் இதுப்போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.

 

இங்கு லேப்டாப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடுமையான பின்புற வலி

கம்ப்யூட்டரைப் போல் அல்லாமல் லேப்டாப்புகளை தொடையின் மீது வாடிக்கையாக வைத்து வேலை செய்வதால் நாம் முடங்கிக் கொண்டோ அல்லது குணிந்தோ வேலை செய்ய நேரிடும். இதனால் உங்கள் பின்புறம் பாதிக்கப்பட்டு, பின்புற வலி கடுமையான அவதியாக மெல்ல மாறிவிடுகிறது. இது ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து அழற்சிக்கும் காரணமாகிறது.

மலட்டுத்தன்மை

லேப்டாப் உபயோகத்தில் ஒரு மிக முக்கியமான சிக்கல் அது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது. இதை மடியில் வைத்துக் கொண்டு உபயோகிக்கும் பொழுது ஏற்படும் சூடு மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விந்தணுக்களை அழிப்பதுடன் அதன் தன்மையையும், தரத்தையும் பாதிக்கிறது.

கம்ப்யூட்டர் பார்வைக் குறைபாடு

நாம் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, கம்ப்யூட்டரை பார்ப்பதை விட மிக நெருக்கமாகப் பார்க்கிறோம். இவ்வாறு செய்கையில் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் எனப்படும் குறைபாட்டிற்கு ஆளாகிறோம். இதனால், கண் அழற்சி, கண் வறண்டு போதல் மற்றும் கண்ணின் பாதிப்பு (பவர்) அதிகரிக்கிறது.

கழுத்து வலி

லேப்டாப்பை பயன்படுத்தும் பலர் தங்களின் கழுத்தைத் தாழ்த்தி குனிந்து பார்ப்பர். இதனால் கழுத்து இறுக்கமுற்று கடும் கழுத்து வலியை ஏற்படுத்தும். இந்த தோற்ற நிலை ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து எலும்பு அயர்விற்கும் (கழுத்து எலும்பில் இடைவெளி ஏற்படுதல்) வழிவகுத்துவிடும்.

தோல் நிறமாற்றக் குறைபாடு

லேப்டாப்பில் இருந்து வெளியேறும் வெப்பம், மடியில் அல்லது தொடையில் உள்ள தோலினை சூடாக்கி அதனை மங்கச் செய்வதுடன் பல தோல் நோய்களுக்கும் வழிவகுக்கும்.

புற்றநோய்

நீங்கள் உங்கள் மடியில் லேப்டாப்புடன் பலமணி நேரம் இருக்கையில் தோல் அரிப்பு ஏற்பட்டு சூடேறுகிறதா? இது நாளடைவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை. இதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான். ஆனால், லேப்டாப்பினால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் விவரிக்க இயலாதவை.

டெக்னாலஜி தேவை தான்.. ஆனால் ஆரோக்கியம் அதைவிட முக்கியமுங்க..