
சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை..!
சீனாவின் வூஹான் பகுதியில் 2019 ஆம் ஆண்டு முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்படுவதற்கு முன்னர் அங்கு கொரோனா வைரஸ் பரவியமைக்கான ஆதாரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனாவின் ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வெளிநாட்டு நிபுணர் பீட்டர் பென் எம்பேரெக் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் பிராந்தியத்திலிருந்து வைரஸ் தொற்று பரவியமை தொடர்பில் ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவொன்று சீனாவுக்கு சென்றுள்ளது.
இந்தநிலையில் அதற்கான ஆதாரங்களை திரட்டுவதற்கு மேலும் செயற்பாடுகள் அவசியமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தமையில் இருந்து இதுவரையில் 23 லட்சம் பேர் வரை மரணித்துள்ளனர்.
அத்துடன் இயற்கை சரணாலயத்தில் வெளவால் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என கூறப்படுகின்ற போதும் அது வூஹான் பகுதியில் இடம்பெற்றிருக்க முடியாதெனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வெளிநாட்டு நிபுணர் பீட்டர் பென் எம்பேரெக் கூறியுள்ளார்