சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4649 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும் 6 பேருக்கு தொற்றுறதியாகியமையை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் மூன்று ஆண் கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியான 4267 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

தொற்றுறுதியான 238 பேர் தற்போத சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.