அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்

அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்

நம் வீட்டு சமையல் அறையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள ஒரு பொருள் என்றால் அது இஞ்சி ஆக தான் இருக்க வேண்டும்.

பொதுவாக இஞ்சி வாசனைக்காகவும், காரத்திற்காக பயன்படுத்துவது என்றாலும் அதன் மருத்துவ பலன் மிக அதிகம் தான்.

இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.