ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் கண்ணுக்கு தெரியும் சிவன்!... கடலுக்கு அடியில் ஒர் அற்புதம்
பொதுவாக கோவில்கள் எல்லாம் நாம் மலை உச்சியில், தரையில், கடற்கரையோரங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலுக்கடியில் பார்த்திருக்கிறோமா?
இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடல் குறிப்பிட்டநேரத்திற்கு மிக நீண்ட தூரம் உள்வாங்குகிறது. 6 மணி நேரம் கழித்து கடல் ஒன்று சேர்ந்துவிடும். இது அதிசயங்கள் நிறைந்த கோவிலாக பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒருஆச்சரியம் என்னவென்றால் பக்தர்கள் கடலில் நடந்து சென்று இந்த கோயிலை வழிபட்டு வரலாம். ஏன் காரில் கூட இந்த கடல் கோவிலுக்கு செல்லலாம். இன்னும் விரிவாக பார்ப்போம் வாங்க…
குஜராத்மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் அமைந்துள்ளது.இந்த கடலைஅரபிக் கடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தபகுதியில் ஒரு சின்ன கிராமம் இருக்கின்றது.
பௌர்ணமி அன்று காலை சூரியன் எட்டிப்பார்ப்பதற்கு கடற்கரையோரத்தில் சாமியை தரிசிக்க மக்கள் கடல் அலையாய் திரண்டிருக்கிறார்கள்.
கைகளில் மாலைகள், பூக்கள், குங்குமம், சந்தனம் என்று சாரைய் சாரையாய் மக்கள் வெள்ளம். கடற்கரையிலிருந்து கடலைபார்த்தால் ஏதோ நடுக்கடலில் ஒரு மின்கம்பம் மட்டும் தெரிகிறது.
சூரியன் மேலேஎழும்ப எழும்ப கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பிக்கிறது. மக்கள் சிவா, சிவா என்று குரல் எழுப்பியபடியே கடலில் நகர ஆரம்பிக்கிறார்கள்
ஒரே ஆச்சரியம். சரியாக பகல் 1மணிக்கெல்லாம் கடல் மிக நீண்ட தூரத்திற்கு உள்வாங்கி சென்று விடுகிறது. மக்கள் கடலில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
பொதுவாக கடற்பரப்பு நாள்தோறும் உள்வாங்கக் கூடியது. பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக்கூடியதுதான்.
ஆனால் கோலியாக் கடல் ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் வரை கடல் மிக நீண்ட தூரத்திற்குஉள்வாங்கிய நிலையில் இருக்கிறது. மிக நீண்டதூரம் சென்ற கடலில் மக்கள் மிக சுலபமாக பயமின்றி நடந்து செல்கிறார்கள்
நடந்து செல்வதற்கு ஏதுவாக அந்த மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன, போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழி பட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்களும், நந்தியும் அமைந்துள்ளது.
நிஷ்களங்கேஷ்வர் என்றால் குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள் உண்டு. இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம், சுகாதாரம் மற்றும் ஞானத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோடை விடுமுறைக்காக வட மாநிலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சிவன் கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அமாவாசை தினத்தன்று, இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கின்றது. சாம்பல், பால், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.