தூக்கத்தில் இளைஞர் விழுங்கிய அதிர்ச்சி பொருள்.. ஸ்கேஸ் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

தூக்கத்தில் இளைஞர் விழுங்கிய அதிர்ச்சி பொருள்.. ஸ்கேஸ் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

இளைஞர் ஒருவருக்கு நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிலையில் ஸ்கேன் செய்து பார்க்கும் போது, வயர்லெஸ் ஹெட்செட் பாகம் நெஞ்சில் சிக்கிக்கொண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த 38 வயது இளைஞர் பிராட் கவுதேர் (Brad Gauthier). இவருக்கு, கடந்த சில வாரங்களாகவே நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அனுகி விஷயத்தை கூறியுள்ளார். முதலில் சாதாரண சோதனை செய்கையில், எந்த விதமான விஷயமும் தென்படவில்லை.

இதனையடுத்து, ஸ்கேன் செய்து பார்க்கையில், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயர்லெஸ் ஹெட்செட் பாகம் சிக்கிக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உணவுக்குழாய் பகுதியில் சிக்கியிருந்த ஹெட்செட்டை எண்டோஸ்கோபிக் முறையில் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

மேலும், அவர் தூக்கத்தில் ஹெட்செட்டை விழுங்கியது தெரியவந்துள்ளது