பதுளை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

பதுளை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

பதுளை - பண்டாரவளை - அடம்பிட்டிய பகுதியில் 58 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அந்த பிரதேசத்தில் ஆட்டு பட்டியொன்றை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அவரின் ஆடுகள் இரண்டு அந்த பிரதேசத்தில் வசிக்கும் வேறொரு நபரின் நாய் கடித்து இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இதனால் குறித்த சந்தேக நபர் நேற்று ஆட்டு பட்டியின் உரிமையாளரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி  கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றிலில் முன்னிலைப்படுத்தப்படுத்தவுள்ளதாக அடம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்